489 Posted: May 06, 2020

தனித்தன்மையையும் தன்னம்பிக்கையையும் மாணவர்கிடையே வளர்க்க அணைவரும் அணிதிரள்வோம். 

தனித்தன்மையையும் தன்னம்பிக்கையையும் மாணவர்கிடையே வளர்க்க

அணைவரும் அணிதிரள்வோம். 


யாஃபருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரபாடசாலையில் ஆண்மையில் (15.02.2020 அன்று) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. யோகசாமி ரவீந்திரன் அவர்கள் மேற்கண்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் மிகவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இந்த விழைளாட்டு நிகழ்வுகளில்; ஒழுங்கமைத்து மாணவர்கள் அழகாகவே செயற்பட்டார்கள். கல்வியும் வியைளாட்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பார்கள்.அந்தஅடிப்படையில் தான் இந்தமெய்வல்லுனர் போட்டி நடைபெறுகின்றது. கல்வியோடு இதனோடு இணைந்த இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் முன்எடுக்கப்படுகின்றன. ஆனால் எம்பெற்றோரைப் பொறுத்த வகையில் புத்தகப் படிப்புத்தான் கல்வி என்று மனம்கொண்டு 20க்கு 20 வகுப்பறைக்கு அப்பால் மாணவர்களைச் சிந்திக்கவிடாது செயற்படுகின்றார்கள். பிள்ளைளை ஆரோக்கி யமாகவும் மனவலிமையோடும் ஆக்கவேண்டிய இந்தக் கல்வி இன்று புத்தகப் புளுக்களாக அல்லது மனப்பாடம் செய்கின்ற இயந்திரங்களாகவே மாற்றியுள்;ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலையை நாம் மாறற முன்வரவேண்டும் என்று கூறினார். 


அந்தக்காலமே பாரதியார் சொன்னார் ஓடிவிளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. கூடிவிளையாடுபாப்பா  என்று. ஆனால் நாம் இன்று மட்டும்தான் கூடிவிளையாடியிருக்கின்றோம் போலும். இதன்மூலம் சிறுவயதுமுதல் இந்த வியைளாட்டு முக்கியம். அதை மாலைமுழுதும் அதை வழக்கப்படுத்திக்கொள் பாப்பா என்று தனது பாடலில் பாரதியார் வலியுறுத்தியதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்னார். ஆனால் மாலைமுழுவதும் நாம்; காலையில் கற்றதை மீண்டும் கற்பதிலே மாத்திரம் ஈடுபடுகின்றோம். எமது பெற்றோர்கூட பிள்ளையை படி படி என்று படிப்பிலேயே நிற்பதால் தான் உடல் உள சமநிலை அற்ற வெறுமனவே முளைவிருத்தி கொண்ட மாணவசமுதாயத்தை மாத்திரமே உருவாக்கி வைத்திருக்கின்றோம்.


ஆனால் நாம் எமது கல்வித் திட்டத்திலேயே விளையாட்டுமூலம் கற்றல் அல்லது விளையாடுவோம் கற்போம் என்னும் எண்ணக்கருவை முன்பள்ளிப்பருவத்திலேயே உருவாக்கி அதற்கான செயற்பாடுகளில் இறங்கி வருகின்றோம். அந்தக்காலத்தில் கூட இந்த பல்லாங்குழி விளையாடுவதன்மூலம் நாம் கல்வி கற்றோம். பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன். அங்கே வட்டம் என்ற சொல், ஒற்றை நாணயம் என்ற சொல் என்பன வருகின்றன. ஆகவே பாட்டுக்கள் மூலமும் நாம் கற்றலை மேற்கொள்ளலாம். 


பிள்ளையை மன அழுத்தம் இன்றி கவனச்சிதைவின்றி சுயாதீனமாகச் செயற்பட்டல் பிள்ளையின் உடல்நலமும் செழிக்கும் உடல் நலமும் செழிக்கும். ஆனால் ஆசிரியர்களும் சரி நாமம் சரி இந்த மன அழுத்தத்தை பிள்ளைகள் மீது ஏற்படுத்தி பிள்ளைகளின் தனித்தன்மையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க இன்று தவறிவிட்டோம். மதிப்பெண்ணைநோக்கி நாங்கள் ஓடுகின்றோம். மைதானத்தில் ஓடவேண்டிய எங்களுடைய மாணவர் குழாமை மைதானத்தை நோக்கி நாங்கள் அசைத்திருக்கின்றோம். எனவே அவ்வாறான செயற்பாடுகள் இன்றி மாலையிலே எங்களுடைய மாணவர்கள் கற்றலுக்கு அப்பால் தமது கல்விச்செயற்பாடுகளை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்தால் தான் உருப்படுவார்கள்  உருவாக்கப்படுவார்கள். அல்லது சாவிகொடுத்த பொம்மை போன்ற செயற்பாட்டில் தான் அவர்களைப் பார்க்கமுடியும். ஒரு வார்ப்பு நிலையில் உள்ள மாணவர்களாக எங்களுடைய சமூதாயம் அவர்களை இன்று உருவாக்கிவிடுகின்றது. இதில்இருந்து விடுபடுவதற்கு இவ்வாறான விளையாட்டுச் செயற்பாடுகள் உண்மையிலேயே உதவும். இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும். 
பொதுவாகவே வெளியிலே சச்சினும் டேனியும் சிக்சர் அடித்தால் பாரட்டுகின்ற எமது அம்மா அப்பாக்கள் அந்த மட்டையை எங்களுடைய பிள்ளைகள் எடுத்தல் அந்த பிள்ளையை பந்தாடுகின்றார்கள். இந்த நிலைமாறவேண்டும். இது மாறினால்தான் நாம் எல்லோரும் இணைந்து சமஆளுமை கொண்ட  கல்வியிலும் சரி உடல்தகமையிலும் சரி சிறப்பாக செயற்படக்கூடிய மாணவர்களை உருவாக்க முடியும்.


உயர்தரப் பாடசாலையாகிய இந்தப்பாடசாலை விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுத்து. உச்சம் கொடுத்தால் தான் எங்களுடைய ஏனைய பாடசாலைகள் அதனை சிறுகச்சிறுக தரும்போது எங்களுடைய வலயமும் உயர்வடைய முடியும். ஆகவே கல்வியோடு இந்த விளையாட்டையும் சேர்த்தால் தான் மாணவர்களாகிய நீங்கள் மாறும் இந்த உலகில்-மிகவும் நெருக்கடியான உலகிலிருந்து விடுபட முடியும். இன்று ஓய்வென்பது கிடையாது. ஓய்வு நேரமும் மாணவர்கள் ஒன்றை கையில் கீழேவைத்து சுறண்டிக் கொண்டிருக்கும் நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்தக் காலாசாரத்திலிருந்து விடுபடுவதற்காவது இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடுவது நல்லது. ஈடுபட்டால் மாத்திரமே புலன்கள் கல்வியில் சேர்வதற்குரிய வாய்ப்புக்கள கிடைக்கும். 


கல்வியிலே சாதனைகள் தொடரவும் அதற்கு உடல் நலத்துடன் உளநலமும் வேண்டும். இந்த இரண்டையும் வளர்ப்பதற்கு விளையாட்டுத்துறைதான் உண்மையான ஓர் ஆசனம் ஆகும் எனலாம். தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிரக்கும். மாணவர்கள் இந்த தேடலை மொபையிலில் மட்டும் தேடாது தமக்கு ஆரோக்கியமான கல்விச் செயற்பாடுகளில் தேடுவதன் ஊடாகவும் வாழ்வில் ருசியிரக்கும் என்பதை நன்கறிந்த ஆதற்கா என்றும் உழைத்து செயற்பட்டு சாதனைகளைச் சரித்திரமாக்க வாழ்த்துகின்றேன் என அவர் மேலும் தனது உரையில். தெரிவித்தார். Upcoming Events

All Events